ETV Bharat / city

'விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்'- அமைச்சர் செங்கோட்டையன் - minister senkottaiyan

ஈரோடு: அணைகளில் தண்ணீர் கூடுதலாக இருப்பதால் மக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுக  admk  ministerv karuppanan  tamilnadu farmers are happy  minister senkottaiyan
'விவசாயிகள் தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்'- அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Oct 2, 2020, 12:24 PM IST

ஈரோட்டில் மகளிர் திட்டத்தின் கீழ் ஆவின் பாலகத்தையும், தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகளிர் சுயஉதவிக் குழு, சாலையோர வியாபாரிகள், மகளிர் கூட்டமைப்புகள் ஆகியோருக்கான கடன் உதவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ”தமிழ்நாட்டில் அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்து வருகின்றனர். அனைத்து அணைகளிலும் தண்ணீர் கூடுதலாக இருப்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியோடு உள்ளனர். இந்திய அளவில் தமிழ்நாடு கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குவதாக பிரதமர் பாராட்டியுள்ளார்.

பள்ளிகள் தற்போதைய சூழலில் திறக்க வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை. சூழ்நிலைகளில், மாறிய பின்புதான் அதுகுறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தனிமனித சுதந்திரம் அதிகமாக உள்ளது. மேலும், நீர்ப்பற்றாக்குறை இல்லா மாநிலமாக தமிழ்நாடு விளங்கிவருகிறது.

அதிமுக  admk  ministerv karuppanan  tamilnadu farmers are happy  minister senkottaiyan
நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்

இந்தாண்டு புதிதாக 3 லட்சத்து 24 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கும் பாட புத்தகங்கள் தயார் நிலையிலுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்த 14 தனியார் பள்ளிகள் மீது புகார்கள் வந்தது. அதில், 9 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலைப்பகுதிகள் உட்பட 52 இடங்களில் ஆன்லைன் வகுப்புகளுக்கு சரியான இணைய வசதி கிடைக்காத காரணத்தால் அங்கு இணைய வசதி கிடைக்க அரசு குழு அமைத்து பரிசீலனை செய்து வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: கரோனா காரணமாக அரசுப் பள்ளி பக்கம் கவனம் செலுத்தும் பெற்றோர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.