ஈரோடு: கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நம்பியூரில் சமூகநலத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் அரசு விழா நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்று 128 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கமும், 240 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.
பின்னர் விழாவில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன் , “ நாங்கள் சொன்னதால்தான் அரசு திட்டங்களை நிறைவேற்றிவருகிறது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அரசு மனிதநேயத்துடன் விவசாய பயிர்க் கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கவேண்டும் என அவர்கள் சொன்னார்களா நாங்கள் செய்துள்ளோம். ஆட்சியில் இருப்பவர்கள் எங்களால்தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
தேர்தல் களத்தில் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கலாம்; ஆனால் செயல்படுத்தமுடியாது. வாக்குகளை மக்களிடம் ஏமாற்றி வாங்கவே திமுகவினர் பொய்யான பரப்புரை மேற்கொண்டுள்ளனர்” என்றார்.