ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பவானி ஆற்றங்கரையோரம் உள்ள மாமரத்துத்துறை மற்றும் அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்று (ஆக 6) வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிம் பேசிய அவர், இந்த வெள்ளம் காரணமாக 1,200 பேர் அருகிலுள்ள பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான அத்தியாவசிய பொருள்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின், தினந்தோறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துவருகிறார்.
அதோடு பவானி, காவேரி கரையோரங்களில் தாழ்வான பகுதியில் குடியிருக்கும் மக்களை நிரந்தர குடியிருப்புக்கு மாற்றுதல் (அ) பாதுகாப்பான இடங்களில் நிரந்தர பட்டா வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, ரூ.11 லட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பை ரூ.1.25 லட்சத்துக்கு வழங்கவும், இந்தத் தொகையையும் தவணை முறையில் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: அம்பானி, அதானி இந்திய மக்களுக்காக பாடுபடுகிறார்கள் - அர்ஜூன் சம்பத்