ETV Bharat / city

விதிமுறைப்படி 13 துறைகளின் அனுமதி பெற்று கருணாநிதி சிலை அமைப்பு

விதிமுறைப்படி 13 துறைகளின் உரிய அனுமதி பெற்று கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

விதிமுறைப்படி 13 துறைகளின் அனுமதி பெற்று கலைஞர் சிலை அமைப்பு

author img

By

Published : Aug 25, 2022, 10:42 AM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் உள்ள கள்ளிப்பட்டியில் படிப்பகத்துடன் கூடிய 8 அடி உயரம் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த படிப்பகத்துடன் கூடிய சிலையினை இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.

இதற்காக கோபிசெட்டிபாளையம் மற்றும் கள்ளிப்பட்டி பகுதிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் 25ஆம் தேதி கருணாநிதி உருவ சிலையை திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுக தொண்டர்கள் சிறப்பாக அமைத்து உள்ளனர்.

இந்த பகுதி பொதுமக்களுக்கு படிப்பகம் முழுமையாக பயன்பட வேண்டும் என்பதற்காக கட்சி சார்பில் செலவு செய்து பல பணிகள் செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே இரண்டு இடங்களில் கருணாநிதியின் முழு உருவ சிலை இருந்தாலும் வடக்கு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே சிலை இது தான்.

சிலை திறப்பு விழாவிற்காக வரும் முதலமைச்சரை ஊத்துகுளியில் இருந்து குன்னத்தூர்,கெட்டிசெவியூர், கொளப்பலூர், கோபி என வழியெங்கும் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர். சிலை திறப்பு விழா முடிந்தவுடன் முதலமைச்சர் சிறப்புரையாற்ற உள்ளார். ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை 85 திட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது தவிர பல கோரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

விதிமுறைப்படி 13 துறைகளின் அனுமதி பெற்று கலைஞர் சிலை அமைப்பு

ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த பட்சம் 10 திட்டங்கள், பிரச்சனைகள் அல்லது கோரிக்கையை வழங்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கள்ளிப்பட்டியில் சிலை திறப்பு விழா முடிந்த பிறகு ஆப்பக்கூடல், ஜம்பை வழியாக ஈரோடு செல்கிறார். 26ஆம் தேதி காலை 9 மணிக்கு பெருந்துறையில் 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதைத்தொடர்ந்து அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகளை கிரேநகரில் பார்வையிடுகிறார்.

கருணாநிதி சிலை அமைக்கப்பட உள்ள இடம் தனியாரிடம் விலைக்கு வாங்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. முழுமையாக சட்டப்படி சிலை அமைக்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை, மின் வாரியம், மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட துறைகளில் அனுமதி பெற்றும், மாவட்ட ஆட்சியர் அனுமதி, தடையின்மை சான்று உள்ளிட்ட முழு அனுமதி பெற்று சிலை அமைக்கப்பட்டு உள்ளது" என அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரோட்டில் காலாவதியான உணவுகளைப்பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.