ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் அதிமுக புதிய கட்சி அலுவலகத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், “அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் புதிய திட்டம் அறிவிக்க இருக்கிறோம். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும்.
கருணாநிதி பரம்பரைக்கே முதலமைசர் ஆகும் அதிஷ்டம் கிடையாது. இந்த கருப்பணன் தரகுத் தொகைக்காக வேலை செய்திருந்தால் எங்கேயோ போயிருப்பேன். செய்தி சேனல்களை பாருங்கள், சன் டிவியில் வரும் நிகழ்சிகளை குடும்பத்துடன் பார்க்க முடிகிறாதா? பிக்பாஸ், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகள் பார்த்தால் குடும்பம் வீணாய் போயிவிடும். பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. சில செய்தி சேனல்கள் மக்களை திசை திருப்புகின்றன.
அதிமுகவிற்கு வாக்களித்தால் தமிழ்நாட்டில் எந்த பிரச்னையும் இருக்காது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆல்பாஸ் வழங்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். இதனால் எனது கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
திருட்டு ரயில் ஏறிவந்த திமுக குடும்பம் பல லட்சம் கோடி சொத்து எப்படி வந்தது. நேர்வழியில் சம்பாதித்தார்களா? வயல்காட்டில் இறங்கி வேலை செய்யும் எடப்பாடி எங்கே? கான்கிரீட் சாலையில் நடந்து விவசாயி எனக் கூறும் ஸ்டாலின் எங்கே? தன் உயிர் பயத்தால் கரோனா காலத்தில் தனது வீட்டுக்குள்ளேயே முக கவசம் அணிந்து கொண்டு காணொலி காட்சி மூலம் தொண்டர்களை சந்திதவர் ஸ்டாலின்” என்றார்.