ETV Bharat / city

man killed by elephant: யானை தாக்கி மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு

man killed by elephant: சத்தியமங்கலம் அருகே கேர்மாளம் மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கி, கடந்த இரண்டு நாள்களில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் மற்ற விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

யானை தாக்கி மேலும் ஒரு விவசாயி பலி
யானை தாக்கி மேலும் ஒரு விவசாயி பலி
author img

By

Published : Jan 15, 2022, 7:35 PM IST

man killed by elephant: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்தக் காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனத்தைவிட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி கேர்மாளம் அருகே உள்ள ஜே.ஆர்.எஸ். புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மசனையன் (55). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.

தற்போது மக்காச்சோளப் பயிர்களை அறுவடை செய்து கதிர்களை உலர்த்துவதற்காக விளைநிலத்தில் குவித்துவைத்துள்ளார்.

தினமும் இரவில் காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதால் இன்று (ஜனவரி 15) வழக்கம்போல் மசனையன் தனது விவசாய விளைநிலத்தில் காவலுக்கு இருந்தார்.

அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுயானை தனது விளைநிலத்தில் புகுந்ததைக் கண்ட மசனையன் சத்தம்போட்டு காட்டு யானையை விரட்ட முயற்சித்தார். அப்போது காட்டு யானை திடீரென மசனையனை துரத்தி தாக்கி தும்பிக்கையால் தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காவலுக்குச் சென்ற மசனையன் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் தேடிச் சென்றபோது அவர் விளைநிலத்தில் யானை மிதித்து இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து உடனடியாக கேர்மாளம் வனத் துறையினருக்கும், ஆசனூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினர், காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அப்போது மலை கிராம மக்கள் காட்டு யானையால் உயிர்ச் சேதம் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே நேற்று (ஜனவரி 14) சத்தியமங்கலம் அருகே பீக்கிரிபாளையம் பகுதியில் பயிருக்கு காவல் இருந்த விவசாயி குருநாதன் என்பவரை காட்டு யானை தாக்கி பலியான நிலையில் மீண்டும் கேர்மாளம் மலைப்பகுதியில் மீண்டும் யானை தாக்கி மேலும் ஒரு விவசாயி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு நாள்களில் மட்டும் காட்டு யானை தாக்கி இரண்டு விவசாயிகள் பலியானதால் விவசாயிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: Pongal gift: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்கள் - எப்போது பெற்றுக்கொள்ளலாம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.