ETV Bharat / city

மலைப்பாதையில் கவிழ்ந்த மாங்காய் ஏற்றி வந்த லாரி! - ஈரோடு திம்பம் மலைப்பாதை

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் மாங்காய் பாரம் ஏற்றி வந்த லாரி, தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரி ஓட்டுநர் நல்வாய்ப்பாக கீழே குதித்து உயிர் தப்பினார்.

ஈரோடு: திம்பம்  மலைப்பாதையில் கவிழ்ந்த மாங்காய் ஏற்றி வந்த லாரி

author img

By

Published : May 12, 2020, 4:54 PM IST

கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து மாங்காய் பாரம் ஏற்றிய லாரி திம்பம் 3வது வளைவுப் பாதையில், தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர் கீழே குதித்து நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். தமிழ்நாடு - கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதையுள்ளது. தமிழ்நாடு - கர்நாடக மாநிலத்திற்கிடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலம், மைசூரிலிருந்து மாங்காய் பாரம் ஏற்றிய லாரியை திண்டுக்கல் ஓட்டுநர் தங்கராஜூ ஓட்டிக்கொண்டு வந்தார். திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த லாரி மலைப்பாதையின் 3-வது வளைவில் திரும்பும் போது, நிலை தடுமாறி திடீரென தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தின்போது லாரி ஓட்டுநர் கீழே குதித்ததால் உயிர் தப்பினார். இதில் லாரியின் நான்கு சக்கரங்களும் தனித்தனியாக கழண்டு சிதறி ஓடின. விபத்தில் லாரியிலிருந்த மாங்காய்கள் மலைப்பாதையில் சிதறிக் கிடக்கின்றன.

அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை காவல் துறையினர், கிரேன் மூலம் லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கவிழ்ந்து விழுந்த தண்ணீர் லாரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.