ETV Bharat / city

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம் - ஈரோட்டில் லாரி விபத்து ஒருவர் பலி

ஈரோடு: தவிட்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திம்பம் மலைப்பாதை வழியாகச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார், இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

Two Peolple Injured And One Person Dead
author img

By

Published : Oct 9, 2019, 7:53 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து லாரி ஒன்று, மைசூருக்கு தவிட்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திம்பம் மலைப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தது. சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் லாரியை ஓட்டினார். மைசூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தசரா பண்டிகையைக் காண்பதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், வளையல் வியாபாரி சங்கர் ஆகிய இருவரும் லாரியில் பயணித்தனர்.

அப்போது திம்பம் மலைப்பாதையில் லேசான மழைத் தூறிக்கொண்டிருந்தது. இந்நிலையில், திம்பம் 9ஆவது வளைவில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, மேலே ஏறமுடியாமல் பின்னோக்கி வந்து சாலையோர சுவற்றை இடித்துக்கொண்டு 7ஆவது வளைவில் விழுந்தது.

இதில் கிருஷ்ணன், ஓட்டுநர் அருண்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். பின்னால் வந்த வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

திம்பம் மலைப்பாதையில் லாரி விபத்து

இதையடுத்து, அங்கு வந்த மீட்பு வாகனம் தவிட்டு மூட்டைகளை அகற்றியபோது, அங்கு சங்கர் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. பின்னர் சங்கரின் சடலத்தை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: தடுப்புச்சுவரில் இருச்சக்கர வாகனம் மோதி தந்தை மகன் பலி!

Intro:Body:புகைப்படம்:: திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த வளையல்வியாபாரி சங்கர்

திம்பம் மலைப்பாதையில் தவிட்டு லாரி கவிழ்ந்து விபத்து: வளையல் வியாபாரி சாவு ; இருவர் காயம்

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் தவிட்டு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் லாரியில் பயணித்த வளையல் வியாபாரி உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் அருண்குமார், கிருஷ்ணன் ஆகியோர காயமடைந்தனர்.

சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு தவிட்டு பாரம் ஏற்றிய திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. லாரியை சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் ஓட்டினார். மைசூர் தசரா பண்டிகையை காண்பதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், வளையல் வியாபாரி சங்கர் ஆகியோரும் லாரியில் பயணித்தனர். திம்பம் மலைப்பாதையில் லேசான மழை தூறல் பெய்து கொண்டிருந்தது. திம்பம் 9வது வளைவில் சென்று கொண்டிருந்தபோது லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக லாரி மேலே ஏறமுடியாமல் கட்டுப்பாட்டை இழுந்து பின்னோக்கி வந்து சாலையோர சுவற்றை இடித்துகொண்டு 7 வது வளைவில் தவிட்டு மூட்டைகளுடன் விழுந்தது. இதில் கிருஷ்ணன், ஓட்டுநர் அருண்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வந்த மீட்பு வாகனம் மூட்டைகளை அகற்றிபோது அங்கு உயிரிழந்த நிலையில் சங்கர் கிடந்தது தெரியவந்தது. சங்கரின் சடலத்தை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.