ஈரோடு: ஈரோடு ஒழுங்கு முறை மஞ்சள் விற்பனைக் கூடத்தில் (Erode turmeric Regulated Market) வாரத்தின் முதல் நாளான நேற்று ஏலம் துவங்கியது முதலே மந்தமான நிலை காணப்பட்டது.காரணம் கடந்த வாரத்தை காட்டிலும் கூடுதலாக விலை கிடைக்கவில்லை.
விராலி மஞ்சள் (Finger) குறைந்தபட்ச விலை குவிண்டால் ரூ6159 அதிகபட்ச விலை ரூ 7869 ஏலம் சென்றது.அதேபோல கிழங்கு மஞ்சள் (Bulb) குவிண்டால் ஒன்றுக்கு அதிக பட்ச விலை ரூ : 5689 குறைந்த பட்ச விலை ரூ 6939 ஏலம் சென்றது.கடந்த வாரத்தை விட விலை குறைந்து ஏலம் சென்றாலும் ஈரோடு ஒழுங்குமுறை மஞ்சள் கூடத்தில் இன்று 3763 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன.
இதில் சுமார் 1810 மஞ்சள் மூட்டைகள் மட்டுமே ஏலத்திற்கு வந்ததது. மஞ்சள் விலை தொடர்ந்து அதிகரித்தால் மட்டுமே அதிக அளவிலான மஞ்சள் விவசாயிகள் ஏல விற்பனைக்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!