ETV Bharat / city

குமரி துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி - வாகனச் சோதனை தீவிரம்!

ஈரோடு: தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க, மாநிலம் முழுவதும் எல்லைப் பகுதியிலும், சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினர் தீவிர வாகனச் சோதனையிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Vehicles under cop eyes at Erode border, Kanyakumari police murder, கன்னியாகுமரி சம்பவம் எதிரொலி, ஈரோடு எல்லையில் வாகன சோதனை தீவிரம்
எல்லையில் வாகனச் சோதனை தீவிரம்
author img

By

Published : Jan 10, 2020, 7:59 PM IST

பயங்கரவாதிகளைக் கண்டறிய காவல் துறையினர் எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பித் தலைமறைவாகினர்.

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது!

தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய உதவி ஆய்வாளர் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து கண்காணிப்புக் படக்கருவியில் பதிவான இரண்டு பயங்கரவாதிகளின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.

துணைத்தலைவர் பதவிக்காக 20 ஆண்டு நண்பனை கொலை செய்த கொடூரம்.!

இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளரைச் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய தீவிரவாதிகளைப் பிடிக்க, மாநிலம் முழுவதும் மாவட்ட எல்லைப் பகுதிகள், சோதனைச் சாவடிகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனையும், கண்காணிப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எல்லையில் வாகனச் சோதனை தீவிரம்

அதன் ஒரு பகுதியாக ஈரோடு, நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியான ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச் சாவடிப் பகுதியிலும் காவல் துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைச்சாவடியை கடக்கும் அனைத்து வாகனங்களின் எண்களும் பதிவு செய்யப்படுவதுடன் வாகன ஓட்டுநர்களின் தொடர்பு எண், முகவரி ஆகியவையும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன10

கன்னியாகுமரி சம்பவம்
எதிரொலி - ஈரோடு எல்லையில் வாகன சோதனை தீவிரம்!

தமிழக கேரள எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் கனியக்காவளை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளரை சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பியோடிய தீவிரவாதிகளைப் பிடிக்க தமிழகம் முழுவதும் மாவட்ட எல்லைப் பகுதியிலும்,சோதனைச் சாவடிகளிலும் காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக கேரள எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கனியக்காவளை சோதனைச் சாவடியில் நேற்று முன் தினம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் வில்சனை இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பித் தலைமறைவாகினர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய உதவி ஆய்வாளர கொலை சம்பவத்தைத் தொடர்ந்து கண்காணிப்புக் கேமராவில் பதிவான இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளரைச் சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பியோடிய தீவிரவாதிகளைப் பிடித்து விட மாநிலம் முழுவதும் மாவட்ட எல்லைப் பகுதிகள், சோதனைச் சாவடிகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனையும் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியான ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச் சாவடிப் பகுதியிலும் காவல்துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனைச்சாவடியை கடக்கும் அனைத்து வாகனங்களின் எண்களும் பதிவு செய்யப்படுவதுடன் வாகன ஓட்டுநர்களின் தொடர்பு எண் மற்றும் முகவரிகளும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Body:சந்தேகத்திற்கிடமளித்திடும் வகையில் வாகன ஓட்டுநர்கள் தெரிய வந்தால் அவர்கள் கீழிறக்கப்பட்டு சோதனைச் சாவடிக்குள் அழைத்துச் சென்று தீவிர விசாரணைக்குப் பிறகு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
Conclusion:உதவி ஆய்வாளரைச் சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பித் தலைமறைவாகியுள்ள பயங்கரவாதிகள் பிடிபடும் வரை சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் வாகனச் சோதனையும், கண்காணிப்புப் பணியும் நடைபெறுமென்று காவல்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.