அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாகாணத்தில் வரும் ஜூன் 23ஆம் தேதி சர்வதேச ரோபோபோட் 2022 என்ற போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் தன்னாட்சியாக வடிவமைக்கப்படும் படகுகள் பயன்பாட்டின்போது சந்திக்கும் சவால்களாக கடற்கரை கண்காணிப்பு, துறைமுகப் பாதுகாப்பு மற்றும் கடற்சார் சாவல்கள் அடங்கும்.
இந்தியா, போலந்து, எகிப்து, இந்தோனேஷியா, துருக்கி, இஸ்ரேல், அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 அணிகளில் இருந்து 750 பேர் பதிவு செய்திருந்தனர். முதற்கட்டமாக கருத்துரு வடிவமைப்பு, தொழில்நுட்ப வடிவமைப்பு குறித்து சமர்ப்பிக்கப்பட்டதில் 19 அணிகள் தேர்வாகின.
இறுதி கட்டமாக திட்ட வடிமைப்பு மற்றும் செயல்விளக்க காணொலி போட்டியில் பல்வேறு நாடுகள் தேர்வாகின. அதில் இக்கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா நீர்மூழ்கிக்கப்பல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதால், இந்தியாவில் இருந்து பண்ணாரிஅம்மன் கல்லூரி அணி மட்டுமே தேர்வாகியுள்ளது.
வரும் ஜூன் 23ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெறும்போட்டியில் மாணவர் திருவருள் செல்வம் தலைமையில் 35 பேர் கொண்ட குழு செல்லவிருக்கிறது.
இதையும் படிங்க: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் போராட்டம்!