ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம் 3 மாத பயிராகும். பழங்குடிகளின் பிரதான தொழிலான மக்காச்சோளம் கதிர் முற்றிய நிலையில் கோழித் தீவனத்திற்கு நாமக்கல், சேலம் போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது.
அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், கதிர் முதிர்வடையும் முன்பாக பச்சை மக்காச் சோளக் கதிர்கள் சென்னை, கேரளா போன்ற பெருநகரங்களில் தின்பண்டமாக பயன்படுத்தப்படுகிறது. ஊட்டி, கேரளா, சென்னை போன்ற பல்வேறு இடங்களில் வேக வைத்த ஸ்வீட் கான் சோளத்தை மக்கள் ஆர்வத்துடன் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இதனால் அறுவடைக்கு முன்பாகவே கதிர் முற்றாத பதமாக உள்ள நிலையில் மக்காச்சோளம் அறுவடையாகிறது. கடம்பூர் மலைப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மக்காச்சோளம் பெரு நகரங்களில் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு பொருளாக இருப்பதால் கிலோ ஏழு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வெளிமார்க்கெட்டில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் மக்காச்சோளத்திற்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதால் தினம்தோறும் 50 லாரிகளில் 60 டன் மக்காச்சோளம் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், முற்றிய மக்காச்சோளம் விற்பனையை விட பச்சை கதிர் விற்பனையில் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சத்தியமங்கலம் மாட்டுத் தீவன சோளத்தட்டு அறுவடை தீவிரம்!