ETV Bharat / city

பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு! - tamilnadu news

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,513 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானி ஆற்றில் தொடர்ந்து 7ஆவது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணைக்
பவானிசாகர் அணைக்
author img

By

Published : Oct 18, 2021, 1:26 PM IST

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சீராக உள்ளதால் அணையில் இருந்து பவானி ஆற்றில் தொடர்ந்து ஒரு வார காலமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது.

தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், நீர் இருப்பு 30.3 டிஎம்சி ஆகவும் உள்ளது.

பவானிசாகர் அணை
பவானிசாகர் அணை

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கடந்த வாரம் முதல் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக கடந்த 12 ஆம் தேதி முதல் அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

இன்று(அக்.18) காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,513 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீராக 3,200 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கும் 2,300 கன அடி நீரும் என மொத்தம் 5,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்தை பொறுத்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும் அளவு அவ்வப்போது மாறுபடும் எனப் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:அசைவ, மதுப்பிரியர்களுக்காக மெகா தடுப்பூசி முகாம் நாள் மாற்றியமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.