ETV Bharat / city

ஈரோட்டில் கரைபுரண்டு ஓடும் காவிரியாறு; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் - தத்தளிக்கும் வீடுகள்! - Water opening in Mettur Dam

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பவானியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கைப்பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரி
காவிரி
author img

By

Published : Aug 4, 2022, 3:39 PM IST

ஈரோடு: மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுவருகிறது. இதனால், இன்று (ஆக.4) காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது.

இதனால், பவானி-குமாரபாளையம் பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் கந்தன்பட்டறை, காவேரி நகர் ஆகியப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சுமார் 325 நபர்களை 3 முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை காண ஏராளமான மக்கள் பவானி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் குவிந்து வருகின்றனர். கீரக்கார வீதியில் வசித்து வரும் மக்கள் வீடுகளுக்குள் புகுந்த காவிரி நீர் வெள்ளத்தில் சிலர் ஆபத்தை உணராமல் மீன் பிடித்துக்கொண்டு வருகின்றனர்.

ஈரோட்டில் கரைபுரண்டு ஓடும் காவிரியாறு; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் - தத்தளிக்கும் வீடுகள்!

இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.