ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப்பாதையில் பயணிக்கும் சரக்கு வாகனங்களில் வனவிலங்குகள் அடிபட்டு உயிரிழக்கின்றன.
இதையடுத்து, வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி பண்ணாரி சோதனைச்சாவடி முதல் திம்பம், ஆசனூர் வரை இரவு நேரத்தில் அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் தடைவிதித்து, பிப்.10ஆம் தேதி முதல் அமல்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று (பிப். 10) பண்ணாரி சோதனைச்சாவடியில், மாலை 6 மணிக்கு அனைத்து கனரக வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.
இலகுரக வாகனங்களாகன ஜீப், கார், டெம்போ, மினிவேன் மற்றும் அரசுப் பேருந்துகள் மட்டும் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டன. இரவு 9 மணிக்கு பிறகு, எந்தவொரு வாகனத்துக்கும் அனுமதி கிடையாது.
இதுகுறித்து, புலிகள் காப்பகத்தின் இயக்குநர் கிரன்ரஞ்சன், "உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த கட்டுப்பாடுகள் கடைபிடிக்கபடுகிறது. நீதிமன்ற உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கூட்டணி