ஈரோடு மாவட்டம் தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோயில் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் விழாவில் தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வருகைபுரிவது வழக்கம். குறிப்பாக இந்த விழாவில் பூசாரி மட்டும் தீ மிதிப்பது ஐதீகம்.
அந்த வகையில் இந்தாண்டுக்கான குண்டம் விழா நேற்று(மார்ச்.16) தொடங்கியது. இதையடுத்து இன்று 60 அடி தீக்குண்டத்தில் பூசாரி மட்டுமே தீ மிதித்தார். அதற்கு பின் பக்தர்கள் அனைவரும் குண்டத்தை தொட்டு வணங்கினர்.
முன்னதாக இந்த விழாவில் மாரியம்மன் சிலை வாத்தியங்கள் முழங்க தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் வீதி உலாவாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது அம்மனை மக்கள் தரிசனம் செய்தனர். மேலும் கோயில் அருகே காலை நேரத்தில், இஸ்லாமிய தொழுகை நடப்பதால், அதற்கு பின் குண்டம் விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி