ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல் துறை சோதனைச் சாவடியில் பர்கூர் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் மக்காச்சோளம் மூட்டைகளுக்கு அடியில் 55 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 1.5 டன் எடையுள்ள குட்கா பொருள்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, பவானி தான சாவடி வீதியைச் சேர்ந்த அருண் உள்பட 7 பேரை பர்கூர் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பவானி தானசாவடி வீதியைச் சேர்ந்த அருண் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, அருணை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதற்கான நகலை பவானி சிறையில் உள்ள அருணுக்கு பர்கூர் காவல் துறையினர் வழங்கினர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் சென்றவரை திசை திருப்பி ரூ.2 லட்சம் கொள்ளை