ஈரோடு: மொடக்குறிச்சி அருகே அமைக்கப்பட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் 253ஆவது பிறந்த நாள் விழாவில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பொல்லான் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, ”சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான இடத்தைப் பல்வேறு அமைப்புகளுடன் ஒன்றிணைந்து தேர்வு செய்யப்பட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன” எனத் தெரிவித்தார்.
சீரமைக்கும் பணிகள்
வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற குடியிருப்பு வாரியம் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள கட்டடங்களை கட்டட உரிமையாளர்களுடன் இணைந்து சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த ஆய்வின் போது, 60 குடியிருப்புகள் இடியும் தருவாயில் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. அதை இடிக்க ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: TamilNadu municipal corporation election: மாநகராட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான்