ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள எல்லமடை கிராமம் பாரதி நகரில் உள்ள விவசாயிகள், கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் சோளம் போன்ற பல வகையான விவசாய பயிர்களை பயிர்செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கோபிசெட்டிபாளையத்தில் வசிக்கும் பால்காரர் ராமசாமி, சுப்புலட்சுமி தம்பதியினருக்குச் சொந்தமான வாழை தோட்டம் மற்றும் சோளக்காட்டில் 14 மயில்கள் இறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் தூக்கநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த மயில்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மயில்களின் இறப்புக்கான காரணம் குறித்து அருகில் உள்ள தோட்டத்தை சேர்ந்தவர்களிடம் விசாரித்து வருவதாகவும், மயில்களின் உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பிறகே மயில்களின் இறப்புக்கான காரணம் அறிந்து அதன் பின்னர் உரிய விசாரணைக்கு பின் தோட்ட உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகர் கணேஷ்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த இரண்டு நாட்களாகவே இந்த தோட்டங்களில் மயில்களின் இறப்பு தொடர்கதையாகியுள்ளதாகவும் அவற்றையெல்லாம் தோட்டத்து உரிமையாளர் வனத்துறைக்கு தெரிவிக்காமல் எடுத்து அப்புறப்படுத்திவிட்டதாகவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
பெரம்பலூரில் பெருகிவரும் மயில்கள்: சேதமாகும் பயிர்களை காக்க தேவை சரணாலயம்!'