ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடத்தூர் புதுக்கொத்துக்காட்டை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் சத்தியமங்கலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் செய்ய சிறுமியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் ஆலோசகர் ஈரோட்டை சேர்ந்த தீபக்குமார் என்பவர், சிறுமியின் பெற்றோரிடம் குழந்தை திருமணம் செய்வது குற்றம் என கூறி திருமணம் நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளார். ஆனால், அதையும் மீறிய சிறுமியின் பெற்றோர் கடந்த 15 நாட்களுக்கு முன் சத்தியமங்கலம் அருகே ஒரு கோயிலில் சிறுமிக்கும், சுரேஷ்குமாருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து சைல்டு லைன் ஆலோசகர் தீபக்குமார் அளித்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கட்டாய திருமணம் செய்த மணமகன் சுரேஷ்குமார், மணமகனின் பெற்றோர், சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் சிறுமியை கட்டாய திருமணம் செய்த சுரேஷ்குமார் அவரது தந்தை வீரக்குமார், சிறுமியின் தாயார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: சகோதரியின் மகளை கொலை செய்த 15 வயது சிறுமி - அதிர்ச்சி சம்பவம்!