ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, சம்பங்கி போன்ற பூச்செடிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
இன்று மல்லிகைப் பூ கிலோ ரூ.1300 வரையிலும், சம்பங்கி பூ கிலோ ரூ.200க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.75 வரையிலும், பட்டுப்பூ கிலோ ரூ.80 வரையிலும் விற்பனையானது. கடந்த வாரம் கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட அரளிப்பூ, 10 மடங்கு உயர்ந்து தற்போது ரூ.300க்கு விற்பனையாகிறது. பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்க: