ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள அயலூர் பள்ளத்துதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது வீட்டின் அருகில் சுமார் 50 அடி ஆளமுள்ள கிணறு உள்ளது. இந்தக் கிணற்றின் அருகே உள்ள விவசாய நிலத்தில் குப்புசாமி வழக்கம் போல தனது 1 வயதுடைய பசு மாட்டை மெய்ச்சலுக்காக கட்டி வைத்தார்.
கிணறு அருகே மேய்ந்துக் கொண்டிருந்த மாடு எதிர்பாராத விதமாக கால் தவறி சுமார் 50 அடி ஆளமுள்ள கிணற்றில் விழுந்துள்ளது. கிணற்றில் விழுந்து மாடு சத்தமிடவே மாட்டின் உரிமையாளர் குப்புசாமி கிணற்றில் சென்று பார்த்துள்ளார்.
அப்போது, மாடு கிணற்றில் தவித்துக்கொண்ருந்ததைக் கண்டு அதிர்சியடைந்த அவர், உடனடியாக கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
படு மாட்டை மீட்ட தீயணைப்புத் துறை
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் தவறி விழுந்து மாட்டை கயிற்றின் மூலம் 1 மணி நேர போரட்டத்திற்கு பொதுமக்கள் உதவியுடன் உயிருடன் மீட்டனர்.
50 அடி கிணற்றில் 4 அடி தண்ணீர் மட்டுமே இருந்ததால் மாட்டின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், வீட்டின் அருகில் உள்ள கிணற்றை சுற்றி தடுப்புகள் எதுவும் இல்லாததே இந்த விபத்திற்கு காரணம் எனத் தீயணைப்பு துறையினர் தெரிவித்ததோடு, கிணற்றை சுற்றி பாதுகாப்பாக தடுப்புகள் அமைக்க கிணற்றின் உரிமையாளர் குப்புசாமிக்கு அறுவுரை வழங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: வீட்டின் அறைக்குள் மாட்டிக்கொண்ட குழந்தை - பத்திரமாக மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள்