ETV Bharat / city

அங்கப்பிரதட்சணம் செய்த பக்தர்களைத் தாண்டி சென்ற பண்ணாரி அம்மன் கோயில் சப்பரம்! - குண்டம் விழா

பிரசித்திப் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பவனி வந்த அம்மன் சப்பரத்தின் முன்பு ஏரளாமான பக்தர்கள் தரையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அம்மன் சப்பரம்
அம்மன் சப்பரம்
author img

By

Published : Mar 11, 2022, 5:55 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் செல்லும் வழியில் உள்ள பிரசித்திப் பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. அங்கு மாசித் திருவிழாவினை முன்னிட்டு, பண்ணாரி அம்மன் சப்பரத்தில் பவனி வருவது வழக்கம்.

அவ்வாறு வரும் வழியில் பெண் பக்தர்கள் படுத்து நேர்த்திக்கடன் செலுத்தி, வழிநெடுகிலும் படுத்திருந்த பக்தர்களைத் தாண்டி பண்ணாரி அம்மன் சப்பரம் சென்றபோது பக்தர்கள் பரவசமடைந்தனர்.

முன்னதாக, பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் மார்ச் 7ஆம் தேதி, திங்கள்கிழமை தொடங்கியது. அதைத்தொடர்ந்து, கிராமங்களில் சப்பரத்தில் பண்ணாரி அம்மன் மற்றும் சருகுமாரியம்மன் வீதியுலா நடந்து வருகிறது.

பண்ணாரி அம்மன் ஆலய சப்பரத் திருவிழா

இதற்கிடையே, சிக்கரம்பாளையம் புதூருக்கு வந்த அம்மன் சப்பரத்துக்கு கிராம மக்கள் மலர்த்தூவி வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, மார்ச் 14ஆம் தேதி கோயிலில் திருக்கம்பம் சாட்டுதல், மார்ச் 21ஆம் தேதி திங்கள்கிழமை இரவு அம்மன் அழைத்தல், 22ஆம் தேதி காலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் ஆகிய வைபவங்கள் நடைபெற உள்ளன.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா - 4 படகுகளில் 80 மீனவர்கள் தீவிற்குப் பயணம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.