ETV Bharat / city

குடும்ப தகராறில் இரு குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்த தந்தை - சத்தியமங்கலம் காவல்துறை

கோபி அருகே குடும்பத் தகராறில் இரு குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்த மளிகை கடைக்காரரின் விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறில் இருகுழந்தைகளுடன் தந்தை வாய்க்காலில் குதிப்பு

author img

By

Published : Aug 20, 2022, 7:22 PM IST

கோபிசெட்டிபாளையம் அடுத்த உக்கரம் குப்பன் துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் நீரில் சிறுவன் மிதந்து வருவதாக கடத்தூர் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் வாய்க்காலில் மிதந்து வந்த சிறுவனை மீட்டனர்.

எனினும் முதலுதவி சிகிச்சை பயன் அளிக்காத நிலையில், நீரில் மூழ்கிய சிறுவன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மற்றொரு சிறுவனின் சடலம் மிதந்து சென்றதை காவல்துறையினர் பார்த்தனர். பின்னர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்தினர் வாய்க்காலில் தேடினர்.

இது குறித்த விசாரணையில் நல்லூரில் மளிகைகடை பழனிச்சாமி என்பவர் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தில் 5 வயது சிரஞ்சீவி மற்றும் 3 வயது விக்னேஷ் என்ற இரு மகன்களுடன் வந்து காளிகுளம் வாய்க்காலில் இறங்கியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐஐடி மாணவி ...செல்போனை ஆய்வு செய்ய முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.