ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி காசியூரில் விவசாய தோட்டத்தில், மாட்டு தீவன பயிருக்குள் ஊடு பயிராக கஞ்சா செடி பயிரிடப்பட்டிருப்பதாக மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் காசியூரில் ராமசாமி என்பவரது விவசாய தோட்டத்திற்குள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு தீவன பயிர்களுக்கு நடுவில் ஊடுபயிராக கஞ்சா செடிகள் இருந்ததை கண்டறிந்தனர். சுமார் 8 அடி உயரத்தில் 30 கஞ்சா செடிகள் இருந்ததாக தெரிகிறது.
இது குறித்து மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற கடத்தூர் போலீசார், அங்கு பயிரிடப்பட்டிருந்த 30 கஞ்சா செடிகளை வேருடன் பிடுங்கி எடுத்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
மேலும் கஞ்சா செடி பயிரிட்டிருந்த தோட்டத்தின் உரிமையாளர் ராமசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கத்தியை காட்டி மிரட்டிய நபர்... அடித்தே விரட்டிய தூத்துக்குடி பெண்..