ETV Bharat / city

பைக்கின் இருக்கைக்குள் புகுந்த கோதுமை நாகம்... உயிர்தப்பிய இளைஞர்...

இரண்டு சக்கர வாகனத்தின் இருக்கைக்குள் புகுந்த கோதுமை நாகத்திடம் இருந்து ஈரோட்டில் இளைஞர் ஒருவர் உயிர்தப்பினார்.

author img

By

Published : Sep 9, 2022, 10:15 PM IST

Etv Bharat
Etv Bharat

ஈரோடு: மேட்டூர் சாலை பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் தொழில் செய்து வருபவர் சதீஸ் என்பவரின், இருசக்கர வாகனத்தில் ஏறிக் கொண்ட கொடிய விஷமுடைய கோதுமை பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

சதீஸ் இன்று (செப்.9) இரண்டு சக்கர வாகனத்தில் வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது, நெழிந்தபடி பாம்பு ஒன்று கால் வழியாக ஏற முயன்றதைக் கண்டு உடனடியாக அவர் சுதாரித்தார். பின், வாகனத்தை நிறுத்திப் பார்த்தபோது, பாம்பு வாகனத்தின் இருக்கையின் அடிப்பகுதிக்குள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக பாம்பு பிடி வீரர் யுவராஜூக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் வாகனத்தில் இருக்கையின் அடிப்பகுதியை அகற்றிவிட்டு பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். இரண்டு சக்கர வாகனத்தில் மறைந்து இருந்தது கொடிய விஷம் உள்ள கோதுமை நாகத்தின் குட்டி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பாம்பு பிடி வீரர் யுவராஜ், பத்திரமாக பாம்பை மீட்டதைத் தொடர்ந்து வனத்துறையின் மூலமாக அது அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிடப்பட்டது.

இருசக்கர வாகன ஓட்டிகளே, இங்கே கவனிங்க: சமீப காலங்களாகப் பெய்து வரும் தொடர் கனமழைகளினால் வீடுகளில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளில் இது மாதிரியான கொடிய நச்சுத் தன்மை கொண்ட பாம்புகள், பூரான்கள் கதகதப்பிற்காக வந்து தஞ்சம் அடைய வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதனை அறியாமல் வாகனங்களை நாம் இயக்க முயலும்போது, அவற்றின் கொடிய தாக்குதலுக்கு நாம் ஆளாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

பைக்கில் நெழிந்த பாம்பு.. உயிர்ப் பிழைத்த இளைஞர்

எனவே, இது மாதிரியான நிலைமைகளில் இருந்து நாம் நமது உயிரை காத்துக்கொள்ள மழைக்காலங்களில் வாகனங்களின் அருகே செல்வதற்கு முன்பாக ஏதேனும் விஷப் பிராணிகள் அவற்றில் உள்ளனவா? என நன்கு கவனித்துக் கொள்வது அவசியமாகும். இதனை வாகன ஓட்டிகள் சிரமம் பார்க்காமல் செய்தால், இது மாதிரியான ஆபத்துகளைத் தவிர்க்கலாம்.. மறவாதீர்கள்.. இதை மழைக்காலங்களில் மட்டுமில்லாமல் எப்போதும் பின்பற்றினால் இன்னும் நல்லது.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் தர்மபுரியில் வளர்ப்பு - கண்டுகொள்ளாத அரசு அலுவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.