ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தங்கும் விடுதியை நடத்திவருபவர் நிர்மலா. இவருக்கு கச்சேரிமேடு பகுதியில் உள்ள ஒரு காலி இடம் உள்ளது. அந்த இடத்தை முன்னாள் நீதிபதி பாரதி அபகரிக்க நினைப்பதாக நிர்மலா குற்றம் சாட்டியிருந்தார்.
சம்பவம் நடந்த நேற்று நிர்மலாவை தகாத வார்த்தைகளால் பாரதி திட்டியுள்ளார், மேலும் நிர்மலா சுதாரிப்பதற்குள்ளாக பாரதி அவரின் சேலையை இழுத்து மாகபங்கம் செய்து கழுதை பிடித்து நெறித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதில் காயமடைந்த அவர் சிகிச்சைகாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என நிர்மலா வேதனை தெரிவித்துள்ளார். பாரதி வேலூர் மாவட்டத்தில் 2004ஆம் ஆண்டு நீதிபதியாக பணியாற்றி ஊழல் புகாரில் பதவி இழந்துள்ளதாக கூறப்படுகிறது.