ஈரோடு: கடந்த ஏப்ரல் 2ஆம் தேதிக்கு பிறகு தேசிய விடுமுறை மற்றும் ஈரோடு மாவட்ட உள்ளூர் விடுமுறை காரணமாகக் கடந்த 13 நாள்களாக மஞ்சள் ஏலம் நடைபெறவில்லை. இனி வழக்கம்போல திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஏல விற்பனை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று ஏப்18 ஆம் தேதி தொடங்கிய ஏலத்தில் 13 நாள்களுக்கு பிறகு நடந்த மஞ்சள் ஏலம் இரண்டு நாள்களில் ரூ.500 குறைந்தும் கடந்த மாதத்தைக் காட்டிலும் ரூபாய் 2000 குறைவாக குவிண்டாலுக்கு கிடைப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே மீண்டும் விலை ஏற்றம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே விவசாயிகள் ஏலத்திற்கு அதிக அளவில் விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல்.18 ஏல விலை: விராலி மஞ்சள் (fingers) குவிண்டால்: குறைந்தபட்சமாக ரூ 5919க்கும் அதிகபட்சமாக ரூ8569க்கும் ஏலம் ஆனது. கிழங்கு மஞ்சள் (Bulb) குறைந்தபட்சமாக ரூ.5555க்கும் அதிகபட்சமாக ரூ.7622க்கும் ஏலம் ஆனது.
ஏப்ரல்.19 (இன்று) ஏல விலை: விராலி மஞ்சள் குவிண்டால் - குறைந்தபட்சமாக ரூ.6456க்கு - அதிகபட்சமாக ரூ.8469 வரை ஏலம் ஆனது. கிழங்கு மஞ்சள் குவிண்டால்: குறைந்தபட்சமாக ரூ.6014க்கு அதிகபட்சமாக 7259 வரை ஏலம் ஆனது.
இதையும் படிங்க: கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்