பெருந்துறை அடுத்த பெருமுடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கம்மாள். 90 வயதான இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் தங்கம்மாளுக்கு சொந்தமான விவசாய நிலத்தை, தனது பெயருக்கு எழுதி தருமாறு மகன் விஜயபுரி வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால் தங்கம்மாள் எழுதி தராததால், விஜயபுரி அவரது நண்பர்களின் உதவியுடன் தங்கம்மாளை துன்புறுத்தி சொத்துக்களை அபகரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பெருந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் தனது மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தங்கம்மாள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.