ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் தனது தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கு ஆண் மயில் ஒன்று நடக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறது.
வாசுதேவன் என்பவர் அதனருகில் சென்று பார்த்தபோது, மயிலின் காலிலும் தலையிலும் அடிபட்டு இருப்பதைக் கண்டார். அவர், உடனடியாக விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காயம்பட்டு தவித்த மயிலை மீட்டு காரச்சிகொரை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கால்நடை மருத்துவர் அசோகன் மயிலை பரிசோதித்து காயத்திற்கு சிகிச்சை அளித்து வருகிறார். பின்னர் மயில் உடல் நலம் சரியான பிறகு வனப்பகுதியில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.