ஈரோடு: சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சுமார் 45 ஆயிரம் பேர் வசித்துவருகின்றனர். தற்போது பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
சாக்கடை வடிகால், குப்பை, டயர், ஓடுகளில் நீர் தேங்கி நிற்பதால் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து டெங்கு கொசு ஒழிக்கும் பணியில் சத்தியமங்கலம் நகராட்சி சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டில் தண்ணீர் தொட்டியில் கொசுமருந்து ஊற்றியும் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து, புகை மருந்து தெளித்தும் வருகின்றனர். டெங்கு பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் வீடுகளில் உள்ள தேவையற்ற பொருளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும்படி நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: கொசு உற்பத்தியை தடுக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு