ETV Bharat / city

பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தனிச்சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்! - ரயில்வே நிலையம்

பாலியல் வன்கொடுமை வழக்குகளை உடனடியாக விசாரித்து தண்டனைகள் வழங்கிட தனிச்சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest_
protest_
author img

By

Published : Oct 9, 2020, 10:19 PM IST

ஈரோடு: உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு ஈரோடு பழைய ரயில் நிலையம் அருகே, கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, நாடு முழுவதும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும், பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்புத் தனிச் சட்டத்தை நடைமுறை படுத்திட வேண்டும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரித்து உடனடியாக தீர்ப்பு வழங்கி தண்டனைகளை நிறைவேற்றுவதற்குரிய சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் மசோதாக்களைத் திரும்ப பெற்றிட வேண்டும்.தேசிய ஊரக வேலைத் திட்டத்தை அனைத்துப் பேரூராட்சிகளிலும் தடையின்றி நிறைவேற்றிட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

இதையும் படிங்க : சென்னையில் சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்கும் 'சைக்கிள் 4 சேஞ்ச்' திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.