ETV Bharat / city

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு சீல் - அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Mar 13, 2021, 7:37 AM IST

ஈரோடு மாநகராட்சியில் உள்ள வ.உ.சி. பூங்கா மைதானத்தில் உள்ள காய்கறி சந்தை, தனியார் உணவு விடுதி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட திடீர் ஆய்வில், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத ஐந்து கடைகளுக்கு சீல் வைத்து தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

Erode District Collector Kathiravan
Erode District Collector Kathiravan

ஈரோடு: கரோனா தடுப்பு நடவடிக்கைகளை வர்த்தகர்கள் சரியாகப் பின்பற்றுகிறார்களா என மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வ.உ.சி. பூங்கா மைதானத்தில் உள்ள காய்கறி சந்தை, தனியார் உணவு விடுதிகளில் மேற்கொண்ட ஆய்வில், முறையாக அரசின் கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாத ஐந்து கடைகளுக்குச் சீல் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா 5000 ரூபாயும் அபராதமாக விதித்தார்.

தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், முகக்கவசம் அணியாமல் வந்த தனிநபர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. வணிகர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் ஆய்வு

மேலும், “நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும்” எனத் ஆணையிட்டார். இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. தங்கதுரை, உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.