ஈரோடு: வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட கிளைச்சிறை அமைந்துள்ளது.
உதவி சிறை கண்காணிப்பாளர் உள்பட, பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிகின்றனர். இந்தச் சிறையில் 17 அறைகள் மற்றும் 52 கைதிகள் வரை சிறையில் அடைக்கும் வசதி உள்ளது.
தற்போது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் 38 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறைக் கைதியான கோவிந்தராஜ் என்பவருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது.
மருத்துவ சோதனையில் கரோனா உறுதி
அதன்பேரில் நேற்று கோவிந்தராஜ் மற்றும் சிறை வளாகத்திலிருந்த கைதிகள் பலருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவில் கோவிந்தராஜ் உட்பட இரு கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மேல் சிகிச்சைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால், ஈரோடு கிளைச்சிறையில் சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஈரோட்டில் நேற்று ஒரே நாளில் 777 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவா சட்டப்பேரவைத் தேர்தல்: சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி