ETV Bharat / city

லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - நடத்துநர் உள்பட இருவர் உயிரிழப்பு!

ஈரோடு: நள்ளிரவில் லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் நடத்துநர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து
author img

By

Published : Sep 25, 2019, 2:19 PM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓமலூரைச் சேர்ந்த நடத்துநர் உதயகுமார் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

bus accident near by erode  , Perundurai police are investigating
உயிரிழந்த நடத்துநர் உதயகுமார்

மேலும் பெங்களூரை சார்ந்த பிரேமா (16) அவரது தாயார் மகேஸ்வரி (36) இருவரும் தூக்கிவீசப்பட்டு சாலையில் விழுந்தனர். இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இருவரும் ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி பிரேமா உயிரிழந்தார்.

லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

அவரது தாயார் மகேஸ்வரி மேல் சிகிச்சைக்காக கோவை சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் பலத்த காயமடைந்த பேருந்து ஓட்டுநர் சின்னராஜ் (51), பயணிகள் வேலுச்சாமி (29), மனோஜ் (27) ஆகிய மூவரும் ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சம்பவம் குறித்து பெருந்துறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படியுங்க:

லாரி மீது ஆட்டோ மோதிய விபத்து - ராணுவத்துக்கு தேர்ச்சி பெற்ற 8 பேர் உயிரிழப்பு!

வேன் மோதி தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

Intro:ஈரோடு ஆனந்த்
செப்.25

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - நடத்துனர் உட்பட இருவர் பலி!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் லாரி மீது அரசு பேருந்து மோதியதில் நடத்துனர் மற்றும் இளம்பெண்ணும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Body:சேலம் மெய்யனூர் கிளையை சேர்ந்த அரசுப் பேருந்து கோவையில் இருந்து ஓசூர் சென்று கொண்டிருந்தது. இதனை சேந்தமங்கலத்தை சேர்ந்த ஓட்டுனர் சின்னராஜ் ஓட்டிவந்தார்.

நள்ளிரவில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகே ஓலப்பாளையம் பகுதியில் போர்வெல் லாரி ஒன்று முன்னே சென்றுகொண்டிருந்தது. இதனை சேலத்தை சேர்ந்த காசி எனும் ஓட்டுனர் ஓட்டிவந்தார்.

நள்ளிரவு அரசு பேருந்தின் முன் சென்ற போர்வெல் லாரி திடீரென ரோட்டின் இடதுபுறம் ஒதுங்கி நின்றது. இதனை எதிர்பாராத அரசு பேருந்து லாரியின் பின்புறம் பலமாக மோதியது.

இதனால் ஏற்பட்ட விபத்தில் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஓமலூரை சேர்ந்த நடத்துனர் உதயகுமார்(25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெங்களூரை சார்ந்த பிரேமா(16) அவரது தாயார் மகேஸ்வரி(36) இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.

இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இருவரும் ஐ ஆர் டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமா இறந்துவிட்டார். மேற்படி இறந்த பிரேமாவின் தாயார் மகேஸ்வரி மேல் சிகிச்சைக்கு கோவை சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அரசு ஓட்டுனர் சின்னராஜ்-51, திருச்சங்கோட்டை சார்ந்த வேலுச்சாமி-29, முசிரியை சார்ந்த மனோஜ் - 27 ஆகிய மூவரும் பேருந்து ஐ ஆர் டி மருத்துவமனையில் பலத்த
காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Conclusion:இந்த விபத்தின் காரணமாக கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.