ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேமாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது தந்தை பழனிச்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவரது பெயரில் இருந்த நிலத்தில் பட்டா மாறுதல் செய்வதற்காக லாகம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அருண் பிரசாத்திடம் விண்ணப்பித்துள்ளார். அவரிடம் அருண் பிரசாத் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதுகுறித்து கார்த்திகேயன் ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு புகார் கொடுத்தார். அதன்பின் லஞ்ட ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் கார்த்திகேயன் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ரசாயனம் தடவிய பணத்துடன் சென்றுள்ளார். அதைத்தொடந்து அருண் பிரசாத்திடம் அந்த நோட்டுகளை கொடுத்தவுடன் ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ட ஒழிப்புத்துறை அலுவலர்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது