ETV Bharat / city

பவானிசாகர் அணை நீர் திறப்பு 900 கன அடியாக குறைப்பு

பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு 3,100 கன அடியிலிருந்து 900 கன அடியாக குறைக்கப்பட்டது.

பவானிசாகர் அணை நீர் திறப்பு 900 கன அடியாக குறைப்பு
பவானிசாகர் அணை நீர் திறப்பு 900 கன அடியாக குறைப்பு
author img

By

Published : Aug 1, 2021, 11:09 PM IST

ஈரோடு: 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள இரண்டு லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட கேரளா, நீலகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி 100 அடியை எட்டியது.

உபரி நீர் நிறுத்தம்

அணையில் ஜூலை மாத இறுதிவரை 100 அடிவரை மட்டுமே நீரைத் தேக்க வேண்டும் என விதிமுறை உள்ளதால், அணைக்கு வந்துசேரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.

3,100 கன அடியிலிருந்து 900 கன அடியாக குறைப்பு

இந்நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அக்டோபர் மாத இறுதிவரை பவானிசாகர் அணையில் 102 அடிவரை நீர் தேக்கலாம் என்பதால் அணையிலிருந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் நேற்றிரவு (ஜூலை 31) நிறுத்தப்பட்டது.

900 கன அடி நீர் திறப்பு

இதன் காரணமாக பவானிசாகர் அணையிலிருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நீர் திறப்பு 900 கன அடியாக குறைக்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.12 அடியாகவும், நீர் இருப்பு 28.8 டிஎம்சி ஆகவும் உள்ளது.

அணைக்கு நீர்வரத்து 6,417 கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 900 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கர்நாடக வெள்ளப்பெருக்கு: வீடுகளை இழந்த குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.