ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நேற்று வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் அருகிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் காளியூரைச் சேர்ந்த அம்மாசை குட்டி என்பவர் கொண்டு வந்த ஒரு ஆள் உயர பூவன் ரக வாழைத்தாரை வாங்க வியாபாரிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
பொதுவாக பூவன் வாழைத்தார் 15 கிலோ மட்டுமே இருக்கும். ஆனால் இந்த வாழைத்தார் 4 அடி உயரத்தில் 40 கிலோ எடை கொண்டதாக இருந்தது. நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் கூடுதல் கிராகி ஏற்பட்டுள்ளது. இறுதியாத உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் அந்த வாழைத்தாரை ரூ.900-க்கு வாங்கினார்.
இதையும் படிங்க: மனைவி வற்புறுத்தி மாட்டுக்கறி கொடுத்ததால் கணவர் தற்கொலை