ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த மாரனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி சரண்யா கணவனை பிரிந்து தன் மகன் நகுலுடன் பூசாரிபாளையத்தில் வசித்து வருகிறார். நகுல் செண்பகபுதூர் தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை மாலை மாயமாகியுள்ளார். சிறுவன் நகுலை உறவினர் தேடியும் கிடைக்காததால் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், காணாமல் போன சிறுவன் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் கூறுகையில், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது நகுல் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: செய்தியாளரை தாக்கிய தாசில்தார்...போலீஸ் விசாரணை...