ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஓன்று அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு, நாய், உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.
இந்நிலையில் வனத்துறையினரிடம் விவசாயிகள் வைத்த கோரிக்கையால், வனப்பகுதியை ஒட்டி உள்ள குப்புசாமி என்பவரது தோட்டத்தில் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று அதிகாலை அப்பகுதிக்கு வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. கூண்டில் சிறுத்தை சிக்கிய தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிக்கியது ஆண் சிறுத்தை என்பதை உறுதி செய்தனர்.
வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்காக சிறுத்தையை வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வனச்சரக அலுவலர் வீட்டில் 13 சவரன் நகை மற்றும் ரூ.6 லட்சம் கொள்ளை