ETV Bharat / city

35 வயது ஆண்களே உஷார்... திருமண கமிஷன் மோசடி... வாய்ஸ் மெசேஜால் வெளிவந்த உண்மை...

ஈரோடு அருகே திருமண கமிஷன் என்ற பெயரில் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆண்களை குறிவைத்து ஏமாற்றும் மோசடி கும்பல்

author img

By

Published : Sep 29, 2022, 5:03 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாசப்பகவுண்டர்புதூரைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு 35 வயதாகிவிட்டதால் புரோக்கர் மூலமாக பெண் தேடி வந்தார். அப்போது புரோக்கர்கள் விருதுநகரைச் சேர்ந்த சரிதா என்பவர் பரிந்துரைத்துள்ளனர். அப்போது சரிதா தாய், தந்தையை இழந்தாகவும், பெரியம்மா விஜயலட்சுமி வளர்ப்பில் வளர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன்பின் அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதனிடையே திருமணத்திற்கு கமிஷனாக ரூ.2 லட்சம் புரோக்கருக்கு தரவேண்டும் என்று விஜயலட்சுமி கூறியதால் சரவணனும் கொடுத்துள்ளார். அதன்பின் இருவருக்கும் திருமணமானது. அதைத்தொடர்ந்து 10 நாள்களாக சரிதாவின் நடவடிக்கையில் சந்தேகம் வந்ததால் அவரது செல்போனை சரவணன் சோதனையிட்டார். அப்போது ஒரு வாய்ஸ் மெசேஜ் இருந்துள்ளது. அதில் விஜயலட்சுமி, சரிதா, புரோக்கர் மூவரும் சேர்ந்து இதேபோல் திருமணம் என்ற பெயரில் பணம் பறித்துள்ளது தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து சரவணன் தனது நண்பருக்கு பெண் பார்த்து தந்தால் ரூ.80 ஆயிரம் கமிஷன் தருவதாக புரோக்கரிடமும், விஜயலட்சுமியிடமும் தெரிவித்தார். அதன்படி பெண் பார்த்து பணம் கொடுக்கும்போது மகளிர் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 7-ஆவது நபரை திருமணம் செய்ய முயற்சி ..ஸ்கெட்ச் போட்டு பிடித்த 6-ஆவது கணவர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.