ETV Bharat / city

'செந்தில் பாலாஜியை எனக்குத் தெரியும், பட் அவருக்கு தான் என்ன தெரியாது' - ட்விஸ்ட் வைத்த மோசடிப் பெண் - அமைச்சர் பெயரை பயன்படுத்தி பணம் மோசடி

அமைச்சர் செந்தில் பாலாஜி பேரை பயன்படுத்திப் பணம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை, பாதிக்கப்பட்டவர்கள் மடக்கிப் பிடித்தும் அங்கிருந்து லாவகமாக தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமைச்சர் பெயரை பயன்படுத்தி ஏமாற்றம்
அமைச்சர் பெயரை பயன்படுத்தி ஏமாற்றம்
author img

By

Published : Dec 29, 2021, 5:59 PM IST

கோயம்புத்தூர்: சூலூர் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் குடியிருந்து வந்தவர், சௌமியா (35). இவர், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியில் இருந்த சுரேஷ் என்பவரைத் திருமணம் செய்தார்.

அவரை விவாகரத்து செய்துவிட்டு கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் லேப்டெக்னீசியனாகப் பணியில் இருந்த சீனிவாசன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

பின்னர், அவருடன் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் வாடகை வீடு எடுத்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது உறவினர் எனக்கூறியும், அவர் மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ஆசைவார்த்தைக் கூறி அருகிலிருந்தவர்களிடம் பணம், நகைகளை வாங்கிக் கொண்டு திடீரென தலைமறைவாயினர்.

காவல் துறை விசாரணை

இது தொடர்பாக அப்பநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த அம்சா என்பவர், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தலைமறைவான சௌமியா சூலூரில் உள்ள லாண்டரி கடைக்குத் துணி வாங்க நேற்று மாலை வருவது குறித்து, தகவலறிந்த பாதிக்கப்பட்டவர்கள் லாண்டரி அருகில் காத்திருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த சௌமியாவை பாதித்தவர்கள் சுற்றிவளைக்க முயன்றபோது, காரில் ஏறி தப்பினார். அவரைத் துரத்திச் சென்ற பாதிக்கப்பட்டவர்கள், கோவை பாப்பநாயக்கன் பாளையம் பாலுந்தரம் ரோட்டில் மடக்கிப் பிடித்தனர்.

அப்போது அங்கு வந்த ரோந்து காவல் துறையினர் சாலையில் தகராறு நடப்பதைப் பார்த்து அங்கிருந்த அனைவரையும் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

சௌமியாவிற்கு பாதுகாப்பாக அவருடன் இரண்டு வழக்கறிஞர்களும் வந்துள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் சூலூர் காவல் ஆய்வாளர் அங்கிருந்த சௌமியாவிடம் விசாரித்தபோது, அவருடன் வந்த வழக்கறிஞர்கள் இரவு நேரத்தில் இளம்பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது என்றும்; சௌமியாவை எங்களுடன் அனுப்பும் படியும் காலையில் ஆஜர் படுத்துகிறோம் எனவும் கூறியுள்ளனர்.

மோசடிப் பெண்ணை வழிமறித்த மக்கள்

அவசர ஊர்தியில் தப்பிய பெண்

அதன் பேரில் அவர்களுடன் சௌமியாவைச் செல்ல ஆய்வாளர் அனுமதியளித்தபோது பாதிக்கப்பட்டவர்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அவர்கள் காவல் நிலையத்தை விட்டு சௌமியா வெளியே செல்ல முடியாதபடி காவல் நிலையம் முன் திரண்டு நின்றதால், காலை நான்கு மணிக்கு திடீரென அவசர ஊர்தியை அழைத்து, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும்கூறி அவ்வூர்தியில் ஏறி வழக்கறிஞர்களுடன் தப்பினார்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

மேலும், தங்களது பணத்தை ஏமாற்றிய பெண்ணை திட்டம் தீட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.

இதையும் படிங்க: Stealing mobile phone: துணிக்கடையில் செல்போன் திருடிய தம்பதி: சிசிடிவி காட்சி வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.