ETV Bharat / city

'பூமியை சுத்தமாக வைப்பதில் சுயநலம் கொள்ளுங்கள்' - இளம் தொழில்முனைவோர் இஷானா

கோவை: பெண்களுக்குத் தேவையான நாப்கின்களை காட்டன் துணிகளில் தயாரித்துவரும் இளம் தொழில்முனைவோர் இஷானா, பூமியை சுத்தமாக வைப்பதில் சுயநலம் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள்விடுக்கிறார்.

காட்டன் நாப்கின் தயாரித்து வரும் இஷானா
காட்டன் நாப்கின் தயாரித்து வரும் இஷானா
author img

By

Published : Jan 13, 2020, 11:53 AM IST

Updated : Jan 13, 2020, 1:58 PM IST

இந்தப் பிரபஞ்சத்தின் மாபெரும் சக்தி என்று போற்றப்படுபவர்கள் பெண்கள். சாதாரண நேரங்களில் ஆண்களைவிட அதிக வேலைசெய்துவரும் இவர்கள், மாதவிடாய் நேரங்களில் சுருண்டுபோவது இயற்கையே. மாதவிடாய் என்பது `அசுத்தம்’ என்று கூறப்பட்ட பழைமைவாத கருத்துகளை ஒதுக்கி, அது ஒரு உடல்நிலை மாற்றம் என்பதை அனைவரும் உணரத் தொடங்கியிருந்தாலும் தனக்கு 'ப்ரீயட்ஸ்' என்று சொல்வதற்கு கூச்சப்பட்டு அந்த நேரத்திலும் உழைக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த நேரங்களில் உடல் வலியையும் மன அழுத்தத்தையும் சந்திக்கும் பெண்கள் மாதவிடாய்க்காக உபயோகப்படுத்தும் சாதாரண நாப்கின்களால் கூடுதலாக சில பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தச் சாதாரண நாப்கின்களால் ஒரு சிலருக்கு அரிப்பு, எரிச்சல், நீர்க்கட்டி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதைப் பயன்படுத்தினால் பிரச்னை என்று தெரிந்தும் பயன்படுத்தவேண்டிய கட்டாயத்தில் பெண்கள் இருக்கின்றனர்.

அனைத்து பெண்களைப் போலவும் இந்தப் பிரச்னையை சந்தித்த ஒருவர் இதற்கான மாற்றுவழியை கண்டறிந்துள்ளார். கோவை மாவட்டம் கணபதி பகுதியைச் சேர்ந்தவர் இஷானா (18). இவர் நெகிழியாலான சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாக மறுமுறை பயன்படுத்தக்கூடிய வகையில் காட்டன் துணிகளால் நாப்கின்களைத் தயாரித்துவருகிறார். ஆடை வடிவமைப்பு பயிற்சி முடித்த இவர், முதலில் தனக்காக நாப்கின்களைத் தயாரித்துள்ளார். இஷானாவின் இந்தச் சிறிய முயற்சிதான் தற்போது அவருக்கு கீழே 10-க்கும் மேற்பட்ட குடும்பப் பெண்களைப் பணியில் அமர்த்தி அவர்களுக்கும் வருவாயை ஈட்டிக் கொடுக்கும் தொழிலாக மாறியுள்ளது.

கோவையில் காட்டன் நாப்கின் தயாரிப்பு - சிறப்புத் தொகுப்பு

இது குறித்து இஷானாவிடம் கேட்டபோது, காட்டன் நாப்கின் புதியமுறை அல்ல எனவும் முன்பு பெண்கள் காட்டன் நாப்கின்கள் பயன்படுத்தி வந்ததாகவும் அதைத் தற்போது சுகாதாரமான முறையில் தயாரித்துவருவதாகவும் தெரிவித்தார். மேலும் வரும்காலத்தில் தன்னைப் போன்று 100 தொழில்முனைவோர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய இஷானா, "கோவை நகரில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நெகிழி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். இதை மண்ணில் போட்டால் மக்குவது இல்லை. எரித்தாலும் இதன்மூலம் பிறருக்கு பாதிப்பு ஏற்படும். கோவையில் மட்டும் நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் நெகிழி நாப்கின்கள் தேங்குகின்றன. இது தமிழ்நாடு, இந்தியா என ஒப்பிடும்போது நாளொன்றுக்கு பல ஆயிரம் டன் நெகிழி நாப்கின் குப்பை உருவாகிறது. இதற்கு மாற்றுவழிதான் காட்டன் நாப்கின். இதை மறுமுறையும் பயன்படுத்தலாம். மேலும் இவை ஆறு நாள்களில் மக்கிவிடும்" என்றார்.

மேலும், நெகிழித் தடைவிதிப்புக்குப் பின்பு பலரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் நெகிழி நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டாம் என்ற சட்டத்தை எதிர்பார்க்காமல் பூமியை சுத்தமாக வைப்பதில் அனைவரும் சுயநலம் கொள்ள வேண்டுமென்றும் ஆசைப்படும் இஷானா, மத்திய மாநில அரசுகள் இந்தக் காட்டன் நாப்கின்களைத் தயாரிக்கும் பணியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தால் நெகிழி நாப்கின்களுக்கு விடை கொடுக்கலாம் எனத் தெரிவித்தார்.

இஷானாவின் இந்த முயற்சியில் இணைந்து பணியாற்றும் இல்லத்தரசி கீதா கூறுகையில், இதன்மூலம் குடும்பத் தலைவிகள் சுயதொழில் செய்வதோடு மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்திற்கு தேவையான வருமானத்தையும் ஈட்ட முடியும் என்றார். ஆண்களுக்கு நிகராகப் பணியிடங்களிலும் வெளியிடங்களிலும் முத்திரை பதித்துவரும் பெண்களுக்கு இடையூறு விளைவிக்கும் மாதவிடாய் பாதிப்புகளுக்கு இந்தக் காட்டன் நாப்கின் மூலம் இனி 'குட் பை' சொல்லலாம்.

இதையும் படிங்க:

"பிடிக்காத நபரிடம் அமைதியாக இருப்பேன்" - மாணவிக்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி

Intro:பூமியை சுத்தமாக வைக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக சுயநலம் கொள்ள வேண்டுமென இளம் சுயத் தொழிலாளி இஷானா தெரிவித்துள்ளார்.

Body:கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் இஷானா 18 வயதான இவர் பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கின்களை காட்டன் துணியால் தயாரித்து பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக மறுமுறை பயன்படுத்தக்கூடிய வகையில் காட்டன் துணிகளால் நாப்கின்களை தயாரித்து வருகிறார் இது மட்டுமில்லாமல் இவர் தனக்கு கீழே பத்துக்கும் மேற்பட்ட குடும்ப பெண்களை பணியில் அமர்த்தி அவர்களுக்கும் வருவாயை ஈட்டிக் கொடுக்கும் பணியை செய்து வருகின்றார் பள்ளிப்படிப்பை முடிந்தபின்னர் ஆடை வடிவமைப்பு பயிற்சியை முடித்த தாகவும் முதலில் தனக்கு மட்டும் இந்த காட்டன் நாப்கின்களை தயாரிப்பதாகவும் இதனை மற்றவர்களும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இதையே தொழிலாக எடுத்து பண்ணி வருவதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் இது குறித்து அவர் கூறுகையில் காட்டன் நாப்கின் இது புதிய முறை அல்ல எனவும் முன்பு பெண்கள் இதே முறையில் காட்டு காட்டன் நாப்கின்கள் பயன்படுத்தி வந்ததாகவும் அதை தற்போது சுகாதாரமான முறையில் தயாரித்து வருவதாக தெரிவித்தார். தற்போது தேவை அதிகம் என்பதால் பிளாஸ்டிக் மாற்றாக இந்த காட்டன் நாப்கின்களை தயாரித்து வருவதாகவும் இளம் வயதிலேயே பெண்கள் பூப்படைவதால் பிளாஸ்டிக்கால் ஆன நாப்கின்களை பயன்படுத்தும்போது பல்வேறு பாதிப்புகளை சந்திப்பதாகவும், இதுபோன்ற குழந்தைகள் முதல் அனைத்து தரப்பு பெண்களுக்கும் சுகாதாரமான முறையில் இந்த காட்டன் நாப்கின் தயாரித்து கொடுத்து வருவதாகவும் வரும் காலத்தில் தன்னைப் போன்று 100 தொழில் முனைவோர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியவர் இந்த காட்டன் நாப்கின் மண்ணில் போட்டால் மக்கக் கூடியது என தெரிவித்தார் கோவை நகரில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பிளாஸ்டிக் நாப்கின்களை பயன்படுத்துவதாகவும் பயன்படுத்தப்பட்ட இந்த பிளாஸ்டிக் மண்ணில் போட்டால் மக்குவது இல்லை எரித்தாலும் இதன்மூலம் பாதிப்பு ஏற்படும் கோவையில் மட்டும் நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் நாப்கின் பிளாஸ்டிக்குகள் தேங்குவதாகவும், இது தமிழகம் இந்தியாவில் ஒப்பிடும்போது நாளொன்றுக்கு பல ஆயிரம் டன் ப பிளாஸ்டிக் குப்பையை உருவாக்குவதாக தெரிவித்தார் பெண்கள் மாதவிடாய் காலங்களின்போது கடைகளுக்குச் சென்று பிளாஸ்டிக் நாப்கின்கள் வாங்காமல் அதற்கு மாற்றாக காட்டன் நாப்கின் கேட்டு வாங்க வேண்டும் என தெரிவித்த அவர் பிளாஸ்டிக் தடை விதிப்புக்கு பின்பு பலரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அனைவரும் பிளாஸ்டிக் நாப்கின்களை பயன்படுத்தவேண்டாம் என்ற சட்டத்தை எதிர்பார்க்காமல் தங்களுடைய சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பதில் சுயநலம் கொள்ள வேண்டுமெனவும் பூமியை சுத்தமாக வைக்க அனைவரும் சுயநலம் கொள்ள வேண்டும் எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.மேலும் மத்திய மாநில அரசுகள் இந்த காட்டன் நாப்கின்களை தயாரிக்கும் பணியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தால் பிளாஸ்டிக் நாப்கின் களுக்கு விடை கொடுக்கலாம் என தெரிவித்தார் காட்டன் நாப்கின்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கும் என தெரிவித்த அவர் இந்தியாவில் வட மாநிலங்களில் மாதவிடாய் காலங்களில் நாப்கின் பயன்படுத்துவது குறித்து எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லை அவர்களிடையே இந்த காட்டன் நாப்கின் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். நாப்கின் தயாரிப்பு குறித்து குடும்ப தலைவி கீதா கூறுகையில் தங்களோடு தையல் பயிற்சி முடித்த பின்னர் தங்களுக்கு உரிய வேலை வாய்ப்பின்றி இருந்த நிலையில் இஷானா முயற்சியால் பத்துக்கும் மேற்பட்ட குடும்ப தலைவிகளுக்கு சுயதொழில் செய்வதோடு மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்திற்கு தேவையான வருமானத்தை தங்களால் இதன்மூலம் ஈட்ட முடியும் எனவும் பிளாஸ்டிக் மாற்றாக இந்த நாப்கின்களை அனைவரும் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Conclusion:
Last Updated : Jan 13, 2020, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.