ETV Bharat / city

அதிமுகவின் எஃகு கோட்டையைக் கைப்பற்றும் முனைப்பில் செந்தில்பாலாஜி! - அதிமுக திமுக கோவை

கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றும் முனைப்பில் திமுக தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில் அங்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி அதற்கான முயற்சியை முழு வேகத்துடன் ஆற்றிவருகிறார். அதன்படி கொங்கு மண்டலத்தின் முக்கிய அதிமுக புள்ளிகள் திமுகவில் இணையலாம் எனக் கூறப்படுகிறது.

அதிமுகவின் கோட்டையை தகர்க்குமா திமுக ?
அதிமுகவின் கோட்டையை தகர்க்குமா திமுக ?
author img

By

Published : Dec 16, 2021, 9:59 AM IST

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 100 விழுக்காடு வெற்றிபெறுவதற்கான பணிகளை திமுக முடுக்கிவிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மண்டலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் சரிவைச் சந்தித்த திமுக, அதனைச் சரிகட்ட செந்தில்பாலாஜியை கோவை மாவட்டத்திற்குப் பொறுப்பாளராக நியமித்து பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாகச் சமீபத்தில் தமிழ்நாடு அரசு கோவை நகர வளர்ச்சி ஆணையம் (Urban Development Authority) அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

திமுகவை தோற்கடித்தவர்

கோவை மாவட்டத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் சிலர் ஏற்கனவே திமுகவில் இணைந்த நிலையில் தற்போது முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.பி. நாகராஜன் நேற்று (டிசம்பர் 14) இரவு ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

திமுகவில் இணைந்த ஏ.பி.நாகராஜன்
திமுகவில் இணைந்த ஏ.பி. நாகராஜன்

மேலும், திமுகவில் இணைந்த ஏ.பி. நாகராஜன் 2014 மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கணேஷ் குமார், பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரைத் தோற்கடித்து அதிமுக சார்பில் போட்டியிட்டு நான்கு லட்சத்து 31 ஆயிரத்து 717 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றவர்.

அதிமுக ~ அமமுக ~ அதிமுக ~ திமுக

திமுகவில் இணைந்த ஏ.பி. நாகராஜன், அதிமுகவிலிருந்து விலகி தினகரன் தலைமையை ஏற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அதன் பின்னர், அமமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தற்பொழுது, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட்டுகள், சிக்சர்கள்

அதிமுக கோட்டையைத் தகர்க்கும் திமுக முயற்சிகள் தொடரும் எனச் செந்தில்பாலாஜியின் விசுவாசிகள் கூறுவதால் மேலும் சில விக்கெட்டுகள், சிக்சர்கள் கொங்கு மண்டலத்தில் நிகழும். குறிப்பாக கோவை, கரூர், ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் முக்கிய அதிமுக புள்ளிகள் திமுகவில் இணையலாம் எனக் கூறப்படுகிறது.

கோவை மண்டலத்தைக் கைப்பற்ற திமுக மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு செந்தில்பாலாஜி வலு சேர்த்துவருகிறார்.

அதன் ஒரு பகுதியாகக் கொங்கு மண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை வலுப்படுத்துவதற்கு திமுக தலைமை காய் நகர்த்திவருகிறது. இதன் தொடர்ச்சியாகக் கடந்த பத்து நாள்களில் மட்டும் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் அதிகம் பேர் இணைந்துள்ளனர்.

திமுகவின் பலம் அதிகரிப்பு

கரூர் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களில் ஒரே நேரத்தில் நான்கு ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளதால் திமுகவின் பலம் 12 ஆக அதிகரித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

1.கே. பாலசுப்பிரமணி - 14ஆவது வார்டு
2. கே. முருகானந்தம் - 13ஆவது வார்டு
3. எம். பெரியசாமி - 20ஆவது வார்டு
4. உஷா - 6ஆவது வார்டு
5. பொன்னுசாமி - அதிமுக கரூர் மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர்
6. மோகன்ராஜ் - எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்
7. கண்ணுசாமி - கரூர் நகர அதிமுக விவசாய அணி இணைச் செயலாளர்
8. கண்ணன் - மாணவரணி துணைத் தலைவர்

இதையும் படிங்க: 'அந்த எண்ணத்தில்தான் செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளேன்' - மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.