கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை, மான், காட்டுமாடு, புலிமற்றும் எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், சிலதினங்களுக்கு முன்பு வனப்பகுதி விட்டு வெளியேறிய ஒரு வயதுடைய ஆண் புலி சாலையில் சோர்வாக நடந்து செல்வதைக் கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பகம் கள துணை இயக்குநர் கணேசன் உத்தரவின்பேரில் வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலான வனத் துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் புலியை ட்ரேன் கேமரா மூலம் கண்காணித்தனர்.
புலிக்கு சிகிச்சை
மூடீஸ் பஜார் சர்ச் பின்புறம் பாழடைந்த பங்களாவில் புலி இருப்பதைக் கண்ட வனத்துறையினர் வலைவீசி பிடித்தனர். மேலும், குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சுற்றித் திரிந்த புலியை பிடித்து ரொட்டிக்கடை மனித விலங்கு மோதல் தடுப்பு மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து சிகிச்சைளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சிகிச்சைக்குப் பின் புலி உடல் நலம் தேறி வருகிறது. இதையடுத்து உயர் அலுவலர்கள் உத்தரவின்பேரில் புலிக்கு கூண்டு அமைத்து மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் புலியை கண்காணித்து வருகின்றனர். முத்து முடி எஸ்டேட்டில் ஒரு வயதுடைய புலி பிடிபட்ட நிலையில் தாய் புலி நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இது குறித்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்டம் காட்டிய T23 புலியை இடமாற்றம் செய்யும் பணியில் வனத்துறையினர்