கோயம்புத்தூர்: மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள் தமிழ்நாட்ட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று(ஜன.12) அர்ப்பணிக்கிறார். இதில் 1,450 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்க உள்ளன. அதேபோல், 20 கோடி ரூபாய் மதிப்பில் செம்மொழி தமிழாய்வு மையம் திறக்கப்படவுள்ளது. அங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்க கால புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி திருக்குறளை முன்னிலைப்படுத்தி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆல் இந்தியா ரேடியோ மூடப்படும் என்று வெளியே தவறான தகவல் பரவுகிறது அது மூடப்படாது.
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு என்பது சித்திரை தான். எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட திட்டமாகும் கூடிய விரைவில் தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரும், அதில் தமிழ்நாடு மக்கள் அங்கு சிகிச்சை பெறுவார்கள். டிடி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அலுவலர்கள் தற்பொழுது நியமிக்கப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூன்று அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அரசாணை