கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர்களாக இருந்த கருணாநிதி, அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் பெயரில் பெரும்பாலான பகுதிகளில் வீதிகளும், தெருக்களும் உள்ளது. மேலும், பல்வேறு அரசியல் பிரமுகர்களின் பெயர்களில் ஊர் மற்றும் வீதிப் பெயர் இருப்பது வழக்கம்.
அந்த வரிசையில் கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அடுத்த தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சீங்குளி கிராமத்தில் உள்ள ஆறாவது மற்றும் ஏழாவது வார்டுக்கு உதயா நகர் என பெயரிடப்பட்டுள்ளது.
பிறந்த நாள்
திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பெயரை வைத்ததாக ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயா செந்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், திமுக சார்பில் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும், பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கியதாகவும், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பெயரை சூட்டி உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் போதைப் பொருள்களை கண்டறிய மோப்ப நாய்கள்