கோவை கணபதி பகுதியில் டாஸ்மாக் ஒன்றில் சமையல்காரராக பணியாற்றி வருபவர் கங்காதரன்(34). கங்காதரன் தன்னுடைய செல்போனில் தன்பாலின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் செயலி ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார்.
அந்தச் செயலி மூலம் கங்காதரனை தொடர்பு கொண்ட பிரசாந்த் என்ற இளைஞர் கடந்த மார்ச் 27ஆம் தேதி தன்பாலின சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.
தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர்கள்: சாய்பாபா காலனி பகுதியிலுள்ள தனியார் மருத்துவனையின் பின்புறம் உள்ள ரயில்பாதையின் அருகே பிரசாந்த், அவரது நண்பர்களான நிசாந்த் மற்றும் மாணிக்கம் ஆகியோரையும் இதற்காக அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, நள்ளிரவு 2.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த கங்காதரன், பிரசாந்த் உடன் தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு மறைந்திருந்த நிசாந்த் மற்றும் மாணிக்கம் ஆகியோர் அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
வீடியோ எடுத்து மிரட்டல்: இதனைத்தொடர்ந்து, பிரசாந்த்தை கத்தியை காட்டி மிரட்டிய கங்காதரன் உட்பட மூவரும், அவரைத் தாக்கியதோடு கையிலிருந்த ரூ.2,500 பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்றுள்ளனர்.
இது குறித்து மேலும், காவல்துறையினரிடம் தெரிவித்தால் இருவரும் தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்ட வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அச்சத்தில் இருந்த கங்காதரன் அச்சம்பவம் தொடர்பாக நேற்று (ஏப்.4) சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இருவர் கைது: இந்தப் புகாரின் பேரில், 377 (இயற்கைக்கு மாறான பாலுறவு), 397 (கொடூரமான காயத்தை ஏற்படுத்தி கொள்ளை) மற்றும் 506 (ii) (மிரட்டல்) ஆகிய பிரிவிற்கு கீழ் வழக்குப்பதிவு பதிவு செய்த போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட பிரசாத் மற்றும் நீசாந்த் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மாணிக்கத்தை தேடி வருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூன்று மாணவர்களும் இணைந்து தன்பாலின சேர்க்கையாளர்களுக்கான டேட்டிங் செயலி மூலம் ஆண்களை குறிவைத்து தன்பாலின சேர்க்கைக்கு அழைத்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதோடு அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளது தெரியவந்தது.
விசாரணையில் திடுக்கிம் தகவல்: இதேபோன்று பத்துக்கும் மேற்பட்டோரை, தன்பாலின சேர்க்கைக்கு அழைத்து மிரட்டி பணம் பறித்துள்ளதாகவும், கடந்த மார்ச் 9ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ரூ.50,000 மற்றும் செல்போனை பறித்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்தக் கூடாது- காவலர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு