தமிழ்நாட்டில் கடந்த 45 நாள்களாக கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் தினசரி வேலைக்கு செல்லும் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை கட்சியினர் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை ரோடு சிடிசி மேட்டில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு திருநங்கைகள் அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினர். கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸ் விழிப்புணர்வு நாடகத்தை காவல் துறையினர் மற்றும் அன்னை அறக்கட்டளை சார்பில் திருநங்கைகள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க:
கரோனாவால் திண்டாடும் மாற்றுப் பாலினத்தவர்கள்; கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமா மத்திய அரசு?