கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் சக்தி நகரைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் ஹரிஹரன் மூன்று ஆண்டுகளாக ஆனை மலை சார்ந்த மேஜர் ராமசாமி தோட்டத்தில் வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில் அவருடன் பணிபுரிந்துவந்த ரஞ்சிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்ய முடிவுசெய்துள்ளனர்.
இதை அறிந்த மேஜர் ராமசாமி தோட்டத்தில் பணிபுரியும் கூலி ஆட்களைக் கொண்டு ஹரிஹரனை தோட்டத்திற்கு வரவழைத்து கை, கால்களைக் கட்டிப்போட்டு கொலை வெறித் தாக்குதலை நடத்தியுள்ளார்.
இரவு முழுவதும் கட்டிப் போட்டு சித்ரவதை செய்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சென்ற உறவினர்கள் ஹரிஹரனை மீட்டு சகாரன்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆனைமலை காவல் துறையினர் ராமசாமி, கூலி ஆட்கள் மீது வழக்குப்பதிவு செய்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை, பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்.
பொள்ளாச்சி அருகே உள்ள உலாந்தி வனச்சரகம் கூமாட்டிவன கிராமத்தில் பழங்குடியின சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு உள்ள செய்தி உண்மைத் தன்மையை உறுதிசெய்ய வழி இல்லாத நிலையும் உள்ளது.
பட்டியலின இளைஞரைத் தாக்கிய கூலிப்படை
இச்சம்பவத்தை மறைக்க காவல் துறையினர் முயற்சிப்பதாகவும், அது கண்டறிய வழிகள் மனித உரிமைக் குழு செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு இச்சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினர், மேஜர் ராமசாமிக்கு எதிரான சார் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்டைக்காரன்புதூர் பட்டியலின இளைஞர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அனைத்து இயக்கங்கள் சார்பில் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், வால்பாறை கண்காணிப்பாளர் சீனிவாசன் அனைத்து இயக்கங்கள் சார்பில் பேச்சுவார்த்தையில் மேஜர் ராமசாமி, கூலியாட்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிய வேண்டும் என்ற வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
அடுத்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகை ஷோபனாவிற்கு ஒமைக்ரான் பாதிப்பு!